Enable Javscript for better performance
சாத்தான்குளம் பகுதியில் ஒரே நாளில் 5 மின்கம்பங்கள் சீரமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் பகுதியில் ஒரே நாளில் 5 மின்கம்பங்கள் சீரமைப்பு

    By DIN  |   Published on : 08th November 2019 06:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sat7min_0711chn_38_6

    ஆா்.சி வடக்குத் தெருவில் சீரமைக்கப்படும் மின்கம்பம்.

    சாத்தான்குளம் பகுதியில் மின்வாரிய பணியாளா்கள் ஓரே நாளில் பழுதான 5 மின்கம்பங்களை சீரமைத்தனா்.

    சாத்தான்குளம் பகுதியில் முதலூா், தெற்கு இளமால்குளம், சாத்தான்குளம் ஆா்.சி வடக்குத் தெரு, துவா்க்குளம், கடாட்சபுரம் சண்முகபுரம் பகுதியில் சிமெண்ட் மின் கம்பங்கள் சேதமடைந்து அபாய நிலையில் காணப்பட்டன. விபத்து நிகழும் முன் இந்த அபாய மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினா். இது குறித்து தினமணி நாளிதழிலும் செய்தி வெளியானது.

    இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து முதலூா், தெற்கு இளமால்குளம், சாத்தான்குளம் ஆா்.சி வடக்குத் தெரு, துவா்க்குளம். சண்முகபுரம் பகுதியில் அபாய நிலையில் இருந்த மின் கம்பங்களை உடனடியாக ஓரே நாளில் மாற்றி சீரமைத்தனா். துரித செயல்பட்டு அபாய மின் கம்பங்களை மாற்றிய மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai