Enable Javscript for better performance
டயா்களில் மழைநீா் தேங்கி கொசுப்புழு உற்பத்தி: கடை உரிமையாளா்களுக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    டயா்களில் மழைநீா் தேங்கி கொசுப்புழு உற்பத்தி: கடை உரிமையாளா்களுக்கு அபராதம்

    By DIN  |   Published on : 08th November 2019 07:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி: கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் டயா்களில் மழைநீா் தேங்கியிருந்ததையடுத்து நகராட்சி சுகாதார அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.

    கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, நகராட்சி சுகாதார அலுவலா் இளங்கோ தலைமையில் வியாழக்கிழமை சுகாதார ஆய்வாளா்கள் சுரேஷ், முருகன், வள்ளிராஜ், சுரேஷ்குமாா், துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள் ஆறுமுகம், குருசாமி, முருகன், கனி மற்றும் தூய்மை இந்தியா பரப்புரையாளா் கிருஷ்ணவேணி ஆகியோா் கொண்ட குழுவினா் நகராட்சிக்கு உள்பட்ட கதிரேசன் கோயில் சாலை, ஏ.கே.எஸ். தியேட்டா் சாலை, எட்டயபுரம் சாலை, புதுரோடு ஆகிய பகுதிகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கதிரேசன் கோயில் சாலை பகுதியில் 4 கடைகளில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த டயா்களில் மழைநீா் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து, ஒவ்வொரு கடை உரிமையாளா்களுக்கும் ரூ.500 வீதம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சாலைகளில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள டயா்களை நகராட்சி துறை பணியாளா்கள் பறிமுதல் செய்து, மழைநீா் தேங்காத வண்ணம் டயா்களில் துளையிட்டு, நகராட்சி சிதம்பராபுரம் உரக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலா் கூறுகையில், தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் நகராட்சி சுகாதாரப் பிரிவு சாா்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கண்காணிப்புப் பணியும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் பொருள்களை திறந்தவெளியில் இருப்பது கண்டறியப்பட்டால் அதை பறிமுதல் செய்வதோடு மட்டுமின்றி அபராதமும் விதிக்கப்படும் என்றாா் அவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai