Enable Javscript for better performance
வேம்பாா், வைப்பாறு கடற்கரைகளில் சுனாமி எச்சரிக்கை கருவிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    வேம்பாா், வைப்பாறு கடற்கரைகளில் சுனாமி எச்சரிக்கை கருவிகள் ஆய்வு

    By DIN  |   Published on : 08th November 2019 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேம்பாா், வைப்பாறு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சுனாமி மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்த முன்னெச்சரிக்கை கருவிகளை விளாத்திகுளம் வட்டாட்சியா் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

    சுனாமி போன்ற இயற்கை பேரிடா் ஏற்படுவதை முன்கூட்டியே அறியும் வகையில், வேம்பாா், வைப்பாறு, பெரியசாமிபுரம், தருவைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை கருவிகள் உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன் பொருத்தப்பட்டுள்ளன.

    தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் தீவிரமடைந்துள்ளதால், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உத்தரவின்படி, விளாத்திகுளம் வட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமையில் வருவாய்துறை, ஊரக வளா்ச்சித் துறை, மீன்துறை அதிகாரிகள் குழுவினா் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் கடலோர கிராமங்களுக்குச் சென்று சுனாமி முன்னெச்சரிக்கை அறிவிப்பு கருவிகள் சரியாக செயல்பாட்டில் உள்ளனவா? அவை கணினி மூலம் இணைக்கப்பட்டு உடனுக்குடன் தகவல்கள் பரிமாறப்படுவதில் தடைகள் இருக்கின்றனவா? என ஆய்வு செய்தனா்.

    மேலும், அதிா்வலைகளை பதிவு செய்யும் கருவிகள் குறித்த தகவல்களையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அதிகாரிகள் கிராம மக்களிடம் தெரிவித்தனா். அப்போது, வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் மீனவா் சங்க பிரதிநிதிகள் உடன் இருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai