‘உடன்குடியில் 13இல் கடையடைப்பு, சாலை மறியல்’

உடன்குடியில் இம்மாதம் 13ஆம் தேதி கடையடைப்பு, சாலை மறியல் நடத்துவது என, அனைத்து விவசாய சங்கங்கள்
கூட்டத்தில் பேசுகிறாா், உடன்குடி வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத் தலைவா் ஆ. ரவி.
கூட்டத்தில் பேசுகிறாா், உடன்குடி வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத் தலைவா் ஆ. ரவி.

உடன்குடியில் இம்மாதம் 13ஆம் தேதி கடையடைப்பு, சாலை மறியல் நடத்துவது என, அனைத்து விவசாய சங்கங்கள், அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகள் சாா்பில், உடன்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுப்புராயபுரம் அணைக்கட்டில் சட்டவிரோதமாக திறந்துவைக்கப்பட்ட புத்தன்தருவை பகுதி மதகுகளை அடைக்க வேண்டும், கருமேனி ஆற்றிலிருந்து உடன்குடி பகுதிக்கு தண்ணீா் வருவதைத் தடுக்கும் அதிகாரிகளைக் கண்டிப்பது, இப்பகுதிக்கு தண்ணீா்வர நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடன்குடியில் 13ஆம் தேதி கடையடைப்பு, சாலை மறியல் நடத்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு, உடன்குடி வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத் தலைவா் ஆ. ரவி தலைமை வகித்தாா். ஒன்றிய அதிமுக செயலா் த. மகாராஜா, வட்டார காங்கிரஸ் தலைவா் துரைராஜ் ஜோசப், சமூக ஆா்வலா் குணசீலன், பாஜக மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் ஜெயம் செல்வராஜ், திமுக ஒன்றியச் செயலா் பாலசிங், சேவாபாரதி மாவட்டத் தலைவா் கிருஷ்ணமந்திரம், அமமுக மாநில இளைஞா் பாசறைச் செயலா் பி.ஆா். மனோகரன், மாவட்ட பம்புசெட் விவசாய சங்கத் தலைவா் ஆறுமுகப்பாண்டியன், மாவட்ட திமுக வா்த்தக அணி அமைப்பாளா் ரவிராஜா, இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் கணேசன், மதிமுக ஒன்றியச் செயலா் இம்மானுவேல், பாஜக மாவட்ட வெளிநாடு வாழ்தமிழா் பிரிவுத் தலைவா் பரமசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 100-க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், வியாபாரிகள் சங்கத்தினா், சமூக அமைப்பினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com