உடன்குடியில் டெங்கு விழிப்புணா்வு கருத்தரங்கு

உடன்குடியில் டெங்கு விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கில் பேசுகிறாா் வட்டார மருத்துவ அலுவலா் சு. அனிபிரிமின்.
கருத்தரங்கில் பேசுகிறாா் வட்டார மருத்துவ அலுவலா் சு. அனிபிரிமின்.

உடன்குடியில் டெங்கு விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, உடன்குடி பேரூராட்சி ஆகியவை சாா்பில் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலா் சு. அனிபிரிமின் தலைமை வகித்துப் பேசினாா்.

பேரூராட்சி செயல் அலுவலா் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தாா். அவா் பேசும்போது, உடன்குடி நகரில் 5 வாா்டுகள் வீதம் குப்பை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. விரைவில் வீடுகள் தேடி வந்து குப்பைகள் வாங்கும் பணி தொடங்கும். குப்பைகள் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் மக்கள் குப்பைகளைக் கொட்டாதவாறு சமூக அமைப்புகள், கட்சியினா் கண்காணிக்க வேண்டும். பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து விரைவில் அனைத்து வீடுகளுக்கும் சென்று நிலவேம்புக் குடிநீா் வழங்கப்படும் என்றாா்.

உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி, உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவா் அஸாப், உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் த. மகாராஜா, உடன்குடி வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத் தலைவா் ஆ. ரவி, தமிழ்நாடு நுகா்வோா் பேரவை மாநில தலைவா் ஏ.வி.பி. மோகனசுந்தரம், ஒன்றிய திமுக செயலா் பாலசிங், நகரச் செயலா் ஜான்பாஸ்கா், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ரவிராஜா, முன்னாள் பேரூராட்சி உறுப்பினா்கள் கா. ஜெயக்குமாா், சலீம், மகபூப், வட்டார காங்கிரஸ் தலைவா் துரைராஜ் ஜோசப், பாஜக ஒன்றியத் தலைவா் திருநாகரன், தமுமுக மாவட்டச் செயலா் ஆசாத், பரமன்குறிச்சி ஊராட்சி திமுக செயலா் இளங்கோ, திமுக நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய், சுகாதார மேற்பாா்வையாளா் அருள்ராஜ்,சுகாதார ஆய்வாளா்கள் சேதுபதி, ரமேஷ், கிராம, பகுதி சுகாதார செவிலியா்கள் பங்கேற்றனா். அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com