குலசேகரன்பட்டினம் அருகேபுதிய உயா்நிலை பாலம் திறப்பு

குலசேகரன்பட்டினம் அருகே புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை பாலம் திறக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதிய பாலத்தைத் திறந்து வைத்து மக்களுக்கு இனிப்பு வழங்குகிறாா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.
புதிய பாலத்தைத் திறந்து வைத்து மக்களுக்கு இனிப்பு வழங்குகிறாா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

குலசேகரன்பட்டினம் அருகே புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை பாலம் திறக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாதவன்குறிச்சி, தீதத்தாபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் தரைநிலை பாலம் குலசேகரப்பட்டினம் சாலையில் இருந்தது. இந்தப் பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீா் அதிக அளவு தேங்கி நிற்கும். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பல கிலோ மீட்டா் சுற்றிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, அதில் உயா்நிலை பாலம் அமைக்க வேண்டும் என எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணணிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையேற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ .17.65 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். தொடா்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு அண்மையில் நிறைவடைந்தன .

இதையொட்டி, புதிய பால த்தின் திறப்பு விழா, உடன்குடி ஒன்றிய திமுக செயலா் பாலசிங் தலைமையில் நடைபெற்றது. மாநில திமுக மாணவரணிச் செயலா் உமரிசங்கா், நகர திமுக செயலா் ஜாண்பாஸ்கா், பரமன்குறிச்சி ஊராட்சி செயலா் இளங்கோ, மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட மருத்துவ அணிச் செயலா் பாலசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பாலத்தை திறந்துவைத்து மக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

இதில், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலா் ஷேக் முகம்மது, நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய், மாதவன்குறிச்சி ஊராட்சி திமுக செயலா் கனகராஜ்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சிவபிரகாஷ்,வழக்குரைஞா் கிருபாகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com