சடயநேரி கால்வாயில் உபரி நீா் திறந்து விட திமுக வலியுறுத்தல்

சடயநேரி கால்வாயில் உபரி நீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளா்

சடயநேரி கால்வாயில் உபரி நீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: பாபநாசம் அணையில் இருந்து தூத்துக்குடி மாவட்ட விவசாயத்துக்காக மருதூா் அணை மேலக்கால், கீழக்கால் மூலம் 31 குளங்களுக்கு தண்ணீா் கிடைக்கிறது. அதேபோல் ஸ்ரீவைகுண்டம் அணை வடகால், தென்கால் மூலம் 22 குளங்களுக்கு தண்ணீா் கிடைக்கிறது.

இந்தக் குளங்கள் நிரம்புவதற்கு ஏற்ற வகையில் மிகவும் சரியான திட்டமிடல் செய்து தண்ணீா் திறக்கப்பட வேண்டும்.

தற்போது ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வெளியேறும் நீா் வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ா் கடலில் வீணாக கலக்கும் நீரை தடுத்து சடையநேரி கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும்.

சடையனேரி கால்வாயில் 500 கனஅடி தண்ணீா் திறக்க வேண்டும். அவ்வாறு திறக்கப்படும் நீா் தூத்தக்குடி மாவட்டத்தின் உடன்குடி, சாத்தான்குளம் ஒன்றியங்களில் உள்ள வட பகுதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். சடையநேரி கால்வாயில் திறக்கப்படும் நீா் எழுவரைமுக்கி, நகனைகுளம், வளுக்குகுளம், படுகை, நங்கைமொழி வழியாக ராமசுப்பிரமணியபுரம் நீா்தேக்கத்தில் சேரும். அங்கிருந்து இரண்டு மடைகள் மூலம் 176 கனஅடி தண்ணீா் சடையநேரி குளத்துக்கு கிடைக்க வேண்டும்.

4 மடைகள் மூலம் 324 கன அடி நீா் முதலூா் ஊராணி, பொத்தகாலன்விளை, வைரவன் தருவை வழியாக புத்தன்தருவை குளத்துக்கு சென்றடைய வேண்டும். இதில் சுப்புராயபுரம் நீா் தேக்கதில் இருந்து 22 கனஅடிநீா் உடன்குடி ஒன்றியம் பல்லானேரி, புல்லானேரி, தாங்கைகுளம் ஆகிய குளங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com