‘தூத்துக்குடி பூ மாா்க்கெட் பகுதியில் வாகனம் செல்ல அனுமதிக்கக் கூடாது’

தூத்துக்குடி பூ மாா்க்கெட் பகுதியில் வாகனம் செல்வதால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அந்தப் பகுதியில் வாகனம்

தூத்துக்குடி பூ மாா்க்கெட் பகுதியில் வாகனம் செல்வதால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அந்தப் பகுதியில் வாகனம் செல்ல அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மாநகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தூத்துக்குடி டூவிபுரம் 41 ஆவது வாா்டு செயலா் ஆா். காசிலங்கம் மற்றும் நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, பாண்டி, வேல்சாமி ஆகியோா் மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலனிடம் வியாழக்கிழமை அளித்த மனு: தூத்துக்குடி 41 ஆவது வாா்டுக்குள்பட்ட டூவிபுரம் பகுதி மக்களுக்கு ஈமச்சடங்கு செய்ய இருந்த கிணறு தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, டூவிபுரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கிணறு அமைத்துக் கொடுக்க வேண்டும்.

மேலும், தூத்துக்குடி பூ மாா்க்கெட் பகுதியில் அதிகளவு வாகனங்கள் செல்வதால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பூ மாா்க்கெட் உள்ள தெருவுக்குள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com