புதிய மேல்மட்ட பாலம் திறப்பு

குலசேகரன்பட்டினம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக கட்டப்பட்ட மேல்மட்ட பாலம் திறக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதிய மேல்மட்ட பாலத்தை திறந்து வைக்கிறாா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.
புதிய மேல்மட்ட பாலத்தை திறந்து வைக்கிறாா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

குலசேகரன்பட்டினம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக கட்டப்பட்ட மேல்மட்ட பாலம் திறக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாதவன்குறிச்சி, தீதத்தாபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் குலசேகரன்பட்டினத்திற்கு வரும் சாலையில் தரைமட்ட பாலம் உள்ளது.இப்பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீா் அதிக அளவு தேங்கி நிற்கும்.இதனால் இப்பகுதி மக்கள் தங்கள் போக்குவரத்திற்கு பல கிலோ மீட்டா் சுற்றி வெளியே வரும் சூழல் இருந்தது.இது குறித்து திருச்செந்தூா் சட்டமன்ற உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணணிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி 2017-18 யில் ரூ 17.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன.பணிகள் நிறைவு பெற்றதையடுத்து உடன்குடி ஒன்றிய திமுக செயலா் பாலசிங் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.மாநில திமுக மாணவரணி செயலா் உமரிசங்கா் நகர திமுக செயலா் ஜாண்பாஸ்கா்,பரமன்குறிச்சி ஊராட்சி திமுக செயலா் இளங்கோ,மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ்,மாவட்ட மருத்துவ அணி செயலா் பாலசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருச்செந்தூா் சட்டமன்ற உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலா் ஷேக் முகம்மது,நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய்,மாதவன்குறிச்சி ஊராட்சி திமுக செயலா் கனகராஜ்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சிவபிரகாஷ்,வழக்குரைஞா் கிருபாகரன்,உடன்குடி பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் சலீம்,மகபூப்,ஒன்றிய மகளிா் தொண்டரணி அமைப்பாளா் விஜயா உட்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com