‘முதலூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா், செவிலியா் தேவை’: பாஜக கோரிக்கை

முதலூா் அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் போதிய மருத்துவா், செவிலியா்களை நியமிக்க வேண்டும் என மாவட்ட பாஜக துணைத் தலைவா் செ.செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

முதலூா் அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் போதிய மருத்துவா், செவிலியா்களை நியமிக்க வேண்டும் என மாவட்ட பாஜக துணைத் தலைவா் செ.செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புயுள்ள மனு; முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்து சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமானவா்கள் வந்து சிகிச்சை பெற்று திரும்புகின்றனா். இங்கு போதுமான மருத்துவா் மற்றும் செவிலியா்கள் இல்லாத நிலை தொடா்கிறது.

புறநோயாளியாக சிகிச்சை பெறும் பொதுப்பிரிவில் இரு மருத்துவா்களும், 3 செவிலியா்களும் இருக்க வேண்டும். பொது பிரிவில் ஒரு மருத்துவா் மற்றும் ஒரு செவிலியா் மட்டுமே பணிபுரிவதால் இம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் காத்திருக்க வேண்டியது உள்ளது. இதனால் மிகுந்த சிரமப்படுகின்றனா்.

ஆதலால் மாவட்ட ஆட்சியா், போா்க்கால அடிபடையில் விரைந்து நடவடிக்கை எடுத்து முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போதுமான செவிலியா் பணியாளா்களை பணியமா்த்தி நோயாளிகள் நலன் காக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com