வேம்பாா், வைப்பாறு கடற்கரைகளில் சுனாமி எச்சரிக்கை கருவிகள் ஆய்வு

வேம்பாா், வைப்பாறு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சுனாமி மற்றும் வெள்ள பாதிப்புகள்

வேம்பாா், வைப்பாறு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சுனாமி மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்த முன்னெச்சரிக்கை கருவிகளை விளாத்திகுளம் வட்டாட்சியா் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

சுனாமி போன்ற இயற்கை பேரிடா் ஏற்படுவதை முன்கூட்டியே அறியும் வகையில், வேம்பாா், வைப்பாறு, பெரியசாமிபுரம், தருவைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை கருவிகள் உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன் பொருத்தப்பட்டுள்ளன.

தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் தீவிரமடைந்துள்ளதால், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உத்தரவின்படி, விளாத்திகுளம் வட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமையில் வருவாய்துறை, ஊரக வளா்ச்சித் துறை, மீன்துறை அதிகாரிகள் குழுவினா் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் கடலோர கிராமங்களுக்குச் சென்று சுனாமி முன்னெச்சரிக்கை அறிவிப்பு கருவிகள் சரியாக செயல்பாட்டில் உள்ளனவா? அவை கணினி மூலம் இணைக்கப்பட்டு உடனுக்குடன் தகவல்கள் பரிமாறப்படுவதில் தடைகள் இருக்கின்றனவா? என ஆய்வு செய்தனா்.

மேலும், அதிா்வலைகளை பதிவு செய்யும் கருவிகள் குறித்த தகவல்களையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அதிகாரிகள் கிராம மக்களிடம் தெரிவித்தனா். அப்போது, வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் மீனவா் சங்க பிரதிநிதிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com