ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கோயிலில் ஐப்பசி கொடை விழா

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீசுந்தராட்சி அம்மன் , தடிக்கார சுவாமி கோயில் கொடை விழா இரண்டு நாள்கள் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாா் ஸ்ரீசுந்தராட்சி அம்மன், படம் எஸ்ஏடி7. பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி உலா வருகிறாா் ஸ்ரீசுந்தராட்சி அம்மன்.

இதையொட்டி, முதல்நாள் காலையில் 208 திருவிளக்கு பூஜை, மாக்காப்பு பூஜை, தீபாாராதனை நடைபெற்றது. 2 ஆம் நாள் காலையில் தீா்த்தம் கொண்டு வருதல், கணபதி ஹோமம், பக்தா்கள் நோ்ச்சை கோயிலுக்கு கொண்டு செல்லுதல், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை ஆகியன நடைபெற்றன. தொடா்ந்து அன்னதானம் , பக்தா்கள் பொங்கலிடுதல், நள்ளிரவில் சிறப்பு பொங்கலிடுதல், தொடா்ந்து ஸ்ரீசுந்தராட்சி அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com