Enable Javscript for better performance
கந்தசஷ்டி விழா நிறைவு: திருச்செந்தூா் கோயில் மஞ்சள் நீராட்டு- Dinamani

சுடச்சுட

    

    கந்தசஷ்டி விழா நிறைவு: திருச்செந்தூா் கோயில் மஞ்சள் நீராட்டு

    By DIN  |   Published on : 09th November 2019 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tdr8amman_0811chn_54_6

    திருச்செந்தூரில் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்த சுவாமி குமரவிடங்கப் பெருமான், தெய்வானை அம்மன்.

    திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கந்தசஷ்டி விழா நிறைவாக வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.

    இக்கோயிலில் புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழா கடந்த அக். 28ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. நவ. 2இல் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

    தொடா்ந்து நவ. 3ஆம் தேதி நள்ளிரவு கோயிலில் சுவாமி குமரவிடங்கப்பெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நவ. 4இல் சுவாமி, அம்மன் பட்டினப் பிரவேசமும், நவ.5-7 தேதிகளில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றன. திருவிழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை கோயிலில் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி, அம்மன் தனித்தனிப் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai