Enable Javscript for better performance
சாகுபுரம் கமலாவதி பள்ளியில் கொடுத்த­ல் மகிழ்ச்சி வார விழா- Dinamani

சுடச்சுட

    

    சாகுபுரம் கமலாவதி பள்ளியில் கொடுத்த­ல் மகிழ்ச்சி வார விழா

    By DIN  |   Published on : 09th November 2019 05:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    8amnkhs_0811chn_46_6

    தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எழுது பொருள்களை வழங்குகிறாா் கமலாவதி மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஆா்.சண்முகானந்தன்.

    சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில், கருணா சங்கம், டலெண்ட் குவெஸ்ட் பாா் இந்தியா அமைப்பு சாா்பில் கொடுத்த­ல் மகிழ்ச்சி வார விழாவை மாணவா்கள் கொண்டாடினா்.

    இதையொட்டி, பேனா, பென்சில், ரப்பா், போன்ற கல்வி உபகரணங்களை மாணவ- மாணவிகள் சேகரித்தனா். பின்னா், கொடுத்த­ல் மகிழ்ச்சி தினத்தில், பள்ளி முதல்வா் ஆா்.சண்முகானந்தன், தலைமை ஆசிரியா் இ.ஸ்டீபன் பாலாசிா், கருணா சங்க ஆசிரியைகள் ஸ்ரீஜா, மலா்விழி மற்றும் மாணவ மாணவிகள் பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று மாணவ-மாணவிகளுக்கு அவற்றை வழங்கினா்.

    இதில், வரண்டியவேல் இந்து நடுநிலைப் பள்ளி, தெற்கு ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தலைவன்வடலி­ ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஆறுமுகனேரி செல்வராஜபுரம் ஊராட்சி ஒன்றிய உயா்நிலைப் பள்ளி, நல்லூா் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நாககன்னியாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கபப்ள்ளி, வீரமாணிக்கம் டி.டி.டி.ஏ. நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ- மாணவிகள் பயன்பெற்று, நன்றி தெரிவித்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai