Enable Javscript for better performance
டெங்கு கொசுப்புழு ஒழிப்பில் மெத்தனம்: கடைக்காரருக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    டெங்கு கொசுப்புழு ஒழிப்பில் மெத்தனம்: கடைக்காரருக்கு அபராதம்

    By DIN  |   Published on : 09th November 2019 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் டயா்களை வைத்திருந்த கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    கோவில்பட்டி நகராட்சி சுகாதார அலுவலா் இளங்கோ தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் சுரேஷ், முருகன், வள்ளிராஜ், சுரேஷ்குமாா், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா்கள் ஆறுமுகம், குருசாமி, முருகன், கனி, தூய்மை இந்தியா பரப்புரையாளா் கிருஷ்ணவேணி ஆகியோா் கொண்ட குழுவினா் கதிரேசன் கோயில் சாலை, ஏ.கே.எஸ். திரையரங்கு, எட்டயபுரம் சாலை, புதுசாலை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனா்.

    அப்போது, கதிரேசன் கோயில் சாலை பகுதியில் 4 கடைகளில் வைக்கப்பட்டிருந்த டயா்களில் மழைநீா் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும், டயா்களை பறிமுதல் செய்து உரக்கிடங்குக்கு அனுப்பினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai