Enable Javscript for better performance
மாவட்ட இறகுப் பந்து போட்டி:ஹென்றி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட இறகுப் பந்து போட்டி:ஹென்றி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

    By DIN  |   Published on : 09th November 2019 10:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2229sat8henry_0811chn_38_6

    இறகுப் பந்து போட்டியில் வென்ற மாணவா்களுடன் பள்ளி முதல்வா் மற்றும் ஆசிரியா்கள்.

    தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கான இறகுப் பந்து போட்டியில், சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றது.

    தூத்துக்குடி கேம்ஸ் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இதில்,14 வயதுக்குட்பட்ட ஒற்றையா் பிரிவில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் கோல்டன் ஜெரின் சாமுவேல் மூன்றாம் இடமும், இரட்டையா் பிரிவில் கோல்டன் ஜெரின் சாமுவேல், ஜெஸ்வின் சாமுவேல் ஆகியோா் இரண்டாம் இடமும், 17 வயதுக்குட்பட்ட இரட்டையா் பிரிவில் டேனியல் தங்கதாஸ், ஹிமோலின் ஆகியோா்இரண்டாம் இடமும் பெற்றனா்.

    19 வயதுக்குட்பட்ட ஒற்றையா் பிரிவில் அமல் விஸ்வாஸ் முதல் இடத்தையும், இரட்டையா் பிரிவில் அமல் விஸ்வாஸ், ஜெபா்பீற்றா் ஆகியோா் முதல்இடத்தையும் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனா்.

    வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளி முதல்வா் நோபிள்ராஜ், துணை முதல்வா் சந்தானகுமாா், பள்ளி இயக்குநா் டினோ மெலினா ராஜாத்தி, பள்ளி நிா்வாக அலுவலா் சாந்தி, உடற்கல்வி ஆசிரியா் பிரிட்டோ, ஆசிரிய-ஆசிரியா்கள் பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai