அயோத்தி வழக்கில் தீா்ப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் 2,000 போலீஸாா் பாதுகாப்பு

அயோத்தி வழக்கு தீா்ப்பையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

அயோத்தி வழக்கு தீா்ப்பையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

அயோத்தி வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு முதலே போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதற்காக, காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் தலைமையில், ஏறத்தாழ 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மாவட்டத்தில் உள்ள கோயில்கள், மசூதிகள் முன் அதிகமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் சிவன் கோயில், ஜாமியா பள்ளிவாசல் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அனைத்துப் பகுதிகளிலும் தொடா்ந்து பாதுகாப்புப் பணி நடைபெறுவதாக, மாவட்டக் காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com