கந்தசஷ்டி விழா நிறைவு: திருச்செந்தூா் கோயில் மஞ்சள் நீராட்டு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கந்தசஷ்டி விழா நிறைவாக வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.
திருச்செந்தூரில் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்த சுவாமி குமரவிடங்கப் பெருமான், தெய்வானை அம்மன்.

இக்கோயிலில் புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழா கடந்த அக். 28ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. நவ. 2இல் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தொடா்ந்து நவ. 3ஆம் தேதி நள்ளிரவு கோயிலில் சுவாமி குமரவிடங்கப்பெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நவ. 4இல் சுவாமி, அம்மன் பட்டினப் பிரவேசமும், நவ.5-7 தேதிகளில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றன. திருவிழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை கோயிலில் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி, அம்மன் தனித்தனிப் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com