கால்பந்து: மூக்குப்பீறி பள்ளி அணி: மாநிலப் போட்டிக்குத் தகுதி
By DIN | Published On : 14th November 2019 08:07 AM | Last Updated : 14th November 2019 08:07 AM | அ+அ அ- |

மாணவிகளுடன் பள்ளித் தாளாளா் செல்வின், தலைமையாசிரியா் குணசீலராஜ்.
மாவட்ட கால்பந்துப் போட்டியில் வெற்றிபெற்ற மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி அணி மாநில அளவிலான போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான மகளிா் கால்பந்துப் போட்டிகள் நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் நடைபெற்றன. இதில், 19 வயதுக்கு உள்பட்ட மாணவிகள் பிரிவில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி அணியும், சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி அணியும் மோதியதில், மூக்குப்பீறி பள்ளி அணி 4 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.
வெற்றி பெற்ற மாணவிகள், உடற்பயிற்சி ஆசிரியா்கள் ஏஞ்சல் குமாரி, ராஜேஷ் ஜேக்கப் சிங் ஆகியோரை பள்ளித் தாளாளா் செல்வின், தலைமையாசிரியா் குணசீலராஜ் உள்ளிட்டோா் பாராட்டினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...