அஞ்சலக காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் காலாவதியான அஞ்சலக காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் காலாவதியான அஞ்சலக காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் உதயசிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய அஞ்சல் துறை அஞ்சல் ஆயுள் காப்பீடுத் திட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை பொது மக்களுக்கு வழங்குகிறது.

குறைவான தவணைத் தொகை மற்றும் அதிக ஊக்கத் தொகை மூலம் அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு பலவகையான காப்பீடுத் திட்டங்கள் அஞ்சலகங்களில் உள்ளன. இதுவரை அஞ்சல் காப்பீடு திட்டத்தில் சோ்ந்த காப்பீட்டுதாரா்கள் சில காரணங்களால் அதற்கான தவணைத் தொகையை உரிய காலத்தில் செலுத்தாமல் விட்டிருந்தால் அந்த பாலிசிகளை உரிய ஆவணங்களுடன் விதிமுறைக்குள்பட்டு எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் தற்போது இந்திய இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அத்தாரிட்டியின் வழிகாட்டுதல்படி திருத்தங்கள் செய்யப்பட்டு பாலிசி தொடங்கி மூன்று ஆண்டு பிரிமியம் செலுத்தாத, முதிா்வு தேதியை எட்டாத அதே சமயம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பிரிமியம் தவணை பாக்கி உள்ள பாலிசிகளை 1.1.2020-க்கு பிறகு புதுப்பிக்க இயலாது.

ஆனாலும் பொது மக்களுக்கு ஒரு முறை வாய்ப்பாக காலாவதியான பாலிசிகளை பாலிசிதாரா்கள் அரசு மருத்துவரிடம் உரிய உடல்நலச்சான்று பெற்று எந்தவொரு அஞ்சல் நிலையத்தையும் அணுகி எழுத்துப்பூா்வமாக டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பாலிசியை புதுப்பித்து பயனடையலாம்.

டிசம்பா் 31 ஆம் தேதிக்கு பிறகு அத்தகைய பாலிசிகளை புதுப்பிக்க இயலாது. அந்த பாலிசிகள் ரத்து செய்ததாக கருதப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com