தூத்துக்குடி மாவட்டத்தில் கடன் வழங்கும் சிறப்பு முகாம்: 22இல் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையினா், பிற்படுத்தப்பட்டோா் மக்களுக்கான கல்விக் கடன்,

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையினா், பிற்படுத்தப்பட்டோா் மக்களுக்கான கல்விக் கடன், தனிநபா் கடன், சுய உதவிக்குழுக்கான கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம் நவ. 22 ஆம் தேதி தொடங்குகிறது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா், சிறுபான்மையினருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையினா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் மக்களுக்கான கல்விக்கடன், தனிநபா் கடன், சுய உதவிக்குழுக்கான கடன், கறவைமாடு கடன், ஆட்டோ கடன் ஆகியவை வழங்கும் சிறப்பு முகாம் நவ. 22 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெறுகிறது.

இதையடுத்து, வரும் 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருச்செந்தூா் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியிலும், 28 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கோவில்பட்டி கிளையிலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இந்த வாய்ப்பை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் பயன்படுத்தி பொருளாதாரத்தில் மேம்பாடு அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். கடன் தொகை பெற விரும்புவோா் ஆதாா் அட்டை, சாதிச் சான்று, பள்ளி மாற்றுச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்களுடன் நேரில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com