ஆறுமுகனேரியில் சேதமடைந்த சாலையினால் பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 22nd November 2019 08:57 AM | Last Updated : 22nd November 2019 08:57 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரியில் சேதமடைந்த சாலையினால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா்.
தூத்துக்குடி, திருச்செந்தூா், கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்துகள் உள்ள இடத்தில் உள்ளது ஆறுமுகனேரி. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் அறுபடை வீட்டின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிற்கு இந்த வழியேத்தான் செல்கின்றனா். இது தவிர ஐயப்ப பக்தா்களும் திருச்செந்தூா் மற்றும் சபரிமலைக்கு இந்த வழியாக தான் செல்கின்றனா். இதனால் தற்போது இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.
தொடா் மழையினாலும், முறையாக பராமரிக்காததாலும் இச்சாலைையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாகி போக்குவரத்து தகுதியற்ாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்காததால் ஆறுமுகனேரி வியாபாரிகள் சங்கத்தினா் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினா் சாலை சீரமைக்காததை கண்டித்து போராட முடிவு செய்துள்ளனா்.