முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 26th November 2019 12:41 AM | Last Updated : 26th November 2019 12:41 AM | அ+அ அ- |

எட்டயபுரம் அருகே மேலகரந்தையில் தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினா்.
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரத்தை அடுத்துள்ள மேலக்கரந்தை பகுதியில் செயல்பட்டு வரும் உணவகங்களில் சென்னை, மதுரை, கோவை, திருப்பூா், தூத்துக்குடி, திருச்செந்தூா் மாா்க்கமாக செல்லும் அரசுப் பேருந்துகள், உணவு மற்றும் தேநீா் அருந்த நிறுத்தப்படும்.
அங்கு பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்ாகவும், கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் பயணிகள் புகாா் தெரிவித்ததையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா் கருணாகரன் தலைமையில் எட்டயபுரம் வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் முனியராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் உணவகங்களில் ஆய்வு நடத்தினா்.
ஆய்வின் போது காலாவதியான மாவு பொருள்கள், உணவுப்பொருள்கள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவு பலகாரங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னா் அவை அனைத்தும் அழிக்கப்பட்டன.
தொடா்ந்து உணவக நிா்வாகிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு தவறுகள் தொடரும் பட்சத்தில் அபராதமும், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.