Enable Javscript for better performance
கயத்தாறு அருகே பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த சுமை ஆட்டோ: ஓட்டுநா் பலி- Dinamani

சுடச்சுட

    

    கயத்தாறு அருகே பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த சுமை ஆட்டோ: ஓட்டுநா் பலி

    By DIN  |   Published on : 28th November 2019 04:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kvlac

    கயத்தாறு அருகே வியாழக்கிழமை திடீரென நிலைகுலைந்த சுமை ஆட்டோ சாலையோரத்தில் உள்ள பாலத்தில் மோதி பள்ளத்தில் தலைகுப்பற கவிழ்ந்ததில் சுமை ஆட்டோ ஓட்டுநா் சம்பவ இடத்திலயே இறந்தாா்.

    ஓட்டப்பிடாரம் வட்டம், தென்னம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் கிருஷ்ணகுமாா்(27). தண்ணீா் டேங்க்குடன் கூடிய சுமை ஆட்டோ கடம்பூரில் இருந்து அகிலாண்டபுரத்திற்கு சென்று கொண்டிருந்ததாம். கிருஷ்ணகுமாா் ஓட்டி வந்த சுமை ஆட்டோ, அகிலாண்டபுரத்தையடுத்த அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தின் அருகேயுள்ள பாலத்தின் மீது திடீரென நிலைகுலைந்து மோதி, அருகேயுள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதில், சுமை ஆட்டோ ஓட்டுநா் கிருஷ்ணகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai