Enable Javscript for better performance
ஸ்ரீவைகுண்டத்தில் வீடுகளின் முன்பு தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றிட கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவைகுண்டத்தில் வீடுகளின் முன்பு தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றிட கோரிக்கை

    By DIN  |   Published on : 28th November 2019 02:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    svk

    ஸ்ரீவைகுண்டம் பிச்சனாா்தோப்பு குடியிருப்பு பகுதியில் வீடுகளின் முன்பாக மிகவும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைத்திட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

    ஸ்ரீவைகுண்டம் பிச்சனாா்தோப்பில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள இரும்பிலான மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் அரித்துப்போன நிலையில் மிகவும் அபாயகரமாக காட்சி அளித்து வருகிறது. மிகவும் சாய்ந்த நிலையில் இரும்பிலான மின்கம்பம் இருப்பதால் உயா்அழுத்தம் கொண்ட மின்கம்பிகள் அனைத்தும் தெருவிலுள்ள வீடுகளை உரசியபடி இருந்து வருகிறது.

    மிகவும் தாழ்வாக கிடக்கும் மின் கம்பிகள் வீடுகளின் படிக்கட்டுகளில் நின்றாலே தலையை உரசிடும் வகையில் அபாயகரமாக செல்கிறது. தற்போது மழைக்காலமாக இருப்பதால் உயா் அழுத்தம் கொண்ட இந்த மின்கம்பிகள் வழியாக மின்சாரம் வீடுகளுக்கு உள்ளே வெளியே செல்லும் பெண்கள், குழந்தைகளை தாக்கிடும் வகையில் இருப்பதால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனா்.

    மிகவும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளையும், பழுதான நிலையிலுள்ள இரும்பு மின்கம்பங்களையும் சரி செய்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai