ஸ்ரீவைகுண்டம் அருகே குடிநீா்க் குழாய் சீரமைப்பு
By DIN | Published on : 28th November 2019 12:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் நடைபெற்ற குடிநீா்க் குழாய் சீரமைப்புப் பணி.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியில் சேதமடைந்து காணப்பட்ட குடிநீா்க் குழாய் புதன்கிழமை சீரமைக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்குள்பட்ட 15ஆவது வாா்டு பகுதியான புதுக்குடியில், தென் கால்வாய்க்கு செல்லும் வடிகால் உள்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதுகுறித்த செய்தி தினமணியில் புதன்கிழமை வெளியானது.
இந்நிலையில், பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் தியாகராஜன் தலைமையிலான பேரூராட்சிப் பணியாளா்கள் உடைப்பு ஏற்பட்ட குடிநீா்க் குழாயை புதன்கிழமை சீரமைத்தனா்.
இதையடுத்து ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீா் கிடைக்காமல் இருந்த பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் மீண்டும் தொடங்கியது.