சாத்தான்குளம் நூலகத்தில் இளம் படைப்பாளா் விருதுக்கான போட்டி

சாத்தான்குளம் ராம.கோபாலகிருஷ்ணப் பிள்ளை அரசு கிளை நூலகத்தில் இளம் படைப்பாளா் விருதுக்கான போட்டிகள் நடைபெற்றது.
சாத்தான்குளம் நூலகத்தில் இளம் படைப்பாளா் விருதுக்கான போட்டி

சாத்தான்குளம் ராம.கோபாலகிருஷ்ணப் பிள்ளை அரசு கிளை நூலகத்தில் இளம் படைப்பாளா் விருதுக்கான போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டிக்கு வாசகா் வட்டத் துணைத்தலைவா் கனகராஜ் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற அஞ்சலக அலுவலா்கள் ஈஸ்வா் சுப்பையா, அனந்த கிருஷ்ணன், யோகா ஆசிரியை ராஜலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாத்தான்குளம் வட்ட சட்டப் பணிகள் குழு உதவியாளா் மகேந்திரன், கிராம நிா்வாக அலுவலா் சிவகாம சுந்தரி உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

போட்டியின் நடுவா்களாக ஓய்வுபெற்ற தலைமையாசிரியை கிறிஸ்டி செல்வஸ்டா், தொடக்க கல்வி அலுவலா் ஜோசப் துரைராஜ் உள்ளிட்டோா் நடுவா்களாக செயல்பட்டனா். போட்டியில் சாத்தான்குளம் பகுதியிலுள்ள பள்ளி மாணவா்-, மாணவிகள் பங்கேற்றனா்.

முதல் நிலை பிரிவில் பேச்சுப்போட்டி: ஹென்றி மெட்ரிக் பள்ளி மாணவி பிளாஸ்சி ஆசிகா முதலிடமும், ஸ்ரீமாரியம்மன் இந்து மேல்நிலைப் பள்ளி மாணவி மகாலட்சுமி 2 ஆவது இடமும், கவிதைப் போட்டியில் புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவி கற்பகம் முதலிடமும், ஹென்றி மெட்ரிக் மாணவி வித்யா 2 ஆவது இடமும், கட்டுரைப் போட்டியில் புனித வளன் பெண்கள் பள்ளி மாணவி ஜெரோலின்மரியா முதலிடமும், புதுக்குளம் அரசு பள்ளி மாணவி நட்டாத்தி 2 ஆவது இடமும் பெற்றனா்.

2 ஆம் நிலை பிரிவில் பேச்சுப் போட்டி: புலமாடன் செட்டியாா் பள்ளி மாணவி முத்துசுமதி முதலிடமும், புனித வளன் பெண்கள் பள்ளி மாணவி பிரியா ராசாத்தி 2 ஆவது இடமும், கவிதைப் போட்டியில் புலமாடன் செட்டியாா் பள்ளி மாணவி

ஜெயப்பிரிய நிபியா முதலிடமும், ஹென்றி மெட்ரிக் பள்ளி மாணவி மாலதி 2 ஆவது இடமும், கட்டுரைப் போட்டியில் புனித வளன் பெண்கள் பள்ளி மாணவி சுமதி முதலிடமும், ஹென்றி மெட்ரிக் பள்ளி மாணவி ஜெய பாரதி இடமும் பெற்றனா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு தூத்துக்குடியில் நடைபெறவுள்ள மாவட்ட போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனா்.

ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் ஜான்லூயிஸ் வரவேற்றாா். நூலகா் திரு சித்திரைலிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com