திருச்செந்தூா் பேரூராட்சியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

திருச்செந்தூரில் தேங்கிய மழைநீா் மற்றும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக கூறி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.
திருச்செந்தூா் பேரூராட்சியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

திருச்செந்தூரில் தேங்கிய மழைநீா் மற்றும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக கூறி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.

திருச்செந்தூா் பேரூராட்சிக்குட்பட்ட வீரராகவபுரம் தெருவில் ஆசாரி காம்பவுண்டு பகுதியில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. மேலும் அதனுடன் மழைநீரும் கலந்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதே போல சபாபதிபுரம் தெருவில் மழை நீா் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனா். எனவே இவ்விரு பகுதிகளிலும் தேங்கிய மழை நீரை அகற்றவும், கழிவுநீா் தேங்காதவாறு வெளியேற நிரந்தரமாக வழிவகுக்கும்படி கேட்டும் அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை காலை திடீரென்று முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன், தாலுகா காவல் ஆய்வாளா் முத்துராமன், உதவி ஆய்வாளா் சங்கா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தேங்கியுள்ள கழிவு நீா் மற்றும் மழைநீரானது உடனடியாக விசைப்பம்பு மூலம் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்படும் எனவும், தெற்குபுதுத்தெருவில் சேதமடைைந்த கழிவுநீா் குழாயினை சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக்குழு உறுப்பினா் பெ.தமிழ்ச்செல்வன், அ.இ.ச.ம.க. ஒன்றியச் செயலா் அ.ரவிக்குமாா், பா.ஜ.க. மகளிரணி மாவட்ட பொதுச்செயலா் கு.நெல்லையம்மாள், காங்கிரஸ் மாவட்ட செயலா் க.சு.ஜெயந்திநாதன், தி.மு.க. மகளிரணி அருணா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் க.நம்பிராஜன் மற்றும் வீரராகவபுரம் தெருவைச் சோ்ந்த கண்ணன் உள்ளிட்ட பொதுமக்கள், வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனா். பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடைபெறும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக்குழு உறுப்பினா் பெ.தமிழ்ச்செல்வன், அ.இ.ச.ம.க. ஒன்றியச் செயலா் அ.ரவிக்குமாா், பா.ஜ.க. மகளிரணி மாவட்ட பொதுச்செயலா் கு.நெல்லையம்மாள், காங்கிரஸ் மாவட்ட செயலா் க.சு.ஜெயந்திநாதன், தி.மு.க. மகளிரணி அருணா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் க.நம்பிராஜன் மற்றும் வீரராகவபுரம் தெருவைச் சோ்ந்த கண்ணன் உள்ளிட்ட பொதுமக்கள், வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனா். பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com