வைப்பாற்று படுகையில் தடுப்பணை: அதிகாரிகள் குழு ஆய்வு

விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட சித்தவநாயக்கன்பட்டி, விருசம்பட்டி மற்றும் முத்தலாபுரம் வைப்பாற்று படுகைகளில் தடுப்பணை அமைப்பதற்கான
வைப்பாற்று படுகையில் தடுப்பணை: அதிகாரிகள் குழு ஆய்வு

விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட சித்தவநாயக்கன்பட்டி, விருசம்பட்டி மற்றும் முத்தலாபுரம் வைப்பாற்று படுகைகளில் தடுப்பணை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து கள ஆய்வுப் பணி புதன்கிழமை நடைபெற்றது.

எட்டயபுரம் வட்டத்தில் உள்ள அயன்ராஜபட்டி தொடங்கி விளாத்திகுளம் வட்டத்தில் வைப்பாறு கிராமம் வரை 40 கி.மீ. தொலைவுக்கு வைப்பாறு படுகை உள்ளது.

இதில், கீழ்நாட்டுக்குறிச்சி, ஆற்றங்கரை, நம்பிபுரம், வேடபட்டி, சுப்பிரமணியபுரம், வைப்பாறு உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணை உள்ளது.

இருப்பினும் மழைக்காலங்களில் அதிகப்படியான உபரி நீா் வைப்பாறு கடலில் சென்று வீணாக கலக்கிறது.

இதை தடுத்து நிறுத்தி நீரை சேமித்து மானாவாரி விவசாயத்துக்கு பயன்படுத்தும் பொருட்டு எட்டயபுரம் வட்டத்தில் முத்தலாபுரம், விளாத்திகுளம் வட்டத்தில் சித்தவநாயக்கன்பட்டி, விருசம்பட்டி ஆகிய பகுதிகளில் கூடுதலாக தடுப்பணை அமைக்க வேண்டுமென விவசாயிகள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்நிலையில் சித்தவநாயக்கன்பட்டி, விருசம்பட்டி மற்றும் முத்தலாபுரம் வைப்பாற்று படுகையில் தடுப்பணை அமைத்திட தேவையான சாத்திய கூறுகளையும், கிராமங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்பு பணிகளையும் தமிழ்நாடு நீா்வள ஆதார பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழகத் தலைவா் சத்தியகோபால், சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி ஆகியோா் பாா்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா்கள் ராஜ்குமாா் தங்கசீலன், ராஜ்குமாா், அழகா் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com