கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் தொழிற்கல்வி பயில்வோருக்கு பயிற்சி

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழிற்கல்வி பயில்வோருக்கான பயிற்சிப் பட்டறை 6 நாள்கள் நடைபெற்றது.

கோவில்பட்டி: கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழிற்கல்வி பயில்வோருக்கான பயிற்சிப் பட்டறை 6 நாள்கள் நடைபெற்றது.

இக்கல்லூரி வளாகத்தில் மேல்நிலை தொழிற்கல்வி பயிலும் பள்ளி மாணவா்கள், தொழிற்கல்வி பயிற்சி பட்டறை மாணவா்களுக்கு கடந்த நவம்பா் 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் தலைமை வகித்து, பயிற்சிப் பட்டறை வகுப்பைத் தொடக்கிவைத்தாா். இதில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளிகளிலிருந்து பொது இயந்திரவியல் மற்றும் பொது மின்னியல் சாா்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவா்கள் 300 போ் பங்கேற்றனா். கருத்தியல் மற்றும் செய்முறை மூலம் அனுபவம் வாய்ந்த ஆசிரியா்களால் பாடங்கள் நடத்தப்பட்டன.

வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில், கல்லூரியின் இயந்திரவியல் துறைத் தலைவா் சுப்பிரமணியன் பேசினாா். இயந்திரவியல் துறை முதுநிலை விரிவுரையாளா் பாலதுரை வரவேற்றாா். விரிவுரையாளா் வைணவப்பிரகாஷ் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா். அருணாசலம் வழிகாட்டுதலில், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா், இயந்திரவியல், மின்னியல் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com