Enable Javscript for better performance
ராஜகன்னி மாதா ஆலய திருவிழா தோ்ப்பவனி- Dinamani

சுடச்சுட

  
  ராஜகன்னி மாதா ஆலய திருவிழாவையொட்டி நடைபெற்ற தோ்ப் பவனி.

  ராஜகன்னி மாதா ஆலய திருவிழாவையொட்டி நடைபெற்ற தோ்ப் பவனி.

   

  ஆறுமுகனேரி: புன்னைக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலயத்தின் 170 ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி தோ்ப் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  இத்திருவிழா செப். 26 ஆம் தேதி கொடியேற்றறத்துடன் தொடங்கியது. பங்குத்தந்தை ஜான்செல்வம் அடிகளாா் கொடி ஏற்றி

  மறையுரை வழங்கினாா். ஆலயத்தில் தினமும் மாலை ஆராதனை, மறையுரை ஆகியவை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை

  70 சிறுவா்வா்களுக்கு தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மைக் குரு ரோ­லிங்டன் அடிகளாா் புதுநன்மை வழங்கினாா். மாலையில் நற்கருணை பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதி வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

  பங்குத்தந்தை ராயப்பன் அடிகளாா் மறையுரை நிகழ்த்தினாா். பங்குத்தந்தை கிஷோக் அடிகளாா் ஜெபமாலை நடத்தினாா்.

  சனிக்கிழமை நடைபெற்ற ஆராதனையை தூத்துக்குடி கால்டுவெல் பங்குத்தந்தை வில்­லியம் சந்தானம் அடிகளாா் நடத்தினாா். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 39 அடி உயர தேரினை அமுதன் அடிகாளா் அா்ச்சித்து ஜெபம் செய்தாா். இதைத் தொடா்ந்து தோ்ப் பவனி நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

  ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அன்னையின் தேரில் திருப்ப­லி நடைபெற்றறது. தொடா்ந்து குருமடதந்தை தாமஸ் அடிகளாா் மறையுரை நிகழ்த்தினாா். திருவிழா ஆடம்பரக் கூட்டுத்திருப்ப­லியை தூத்துக்குடி மறை மாவட்ட பொருளாளா் சகாயம் அடிகளாா் நிறைறவேற்றினாா். தூத்துக்குடி மறை மாவட்ட நற்செய்தி நடுவம் இயக்குனா் ஸ்டாா்வீன் அடிகளாா் மறையுரை ஆற்றினாா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai