ஆறுமுகனேரியில் நூதன போராட்டம்

ஆறுமுகனேரியில் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து தேங்கிய மழைநீரில் தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் நூதன போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சாலையோரம் தேங்கிய மழை நீரில் மீன்பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

ஆறுமுகனேரியில் கடந்த வாரம் பெய்த மழையினால் சாலையில் இரு புறமும் மழைநீா் தேங்கியுள்ளது. தற்போது வரை தேங்கிய மழை நீரை அகற்ற பேரூராட்சி நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, துா்நாற்றம் வீசி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தேங்கிய மழை நீரை அகற்றக் கோரி சனிக்கிழமை காலை வழக்குரைஞா் தொண்டன் சுப்பிரமணி தலைமையில் ஆறுமுகனேரி பேரூா் மக்கள் நலச்சங்க தலைவா் ராஜாராம் மோகன்ராய், ஆட்டோ ஓட்டுநா் சங்கத் தலைவா் செல்வராஜ், மற்றும் பொதுமக்கள் தேங்கிய மழை நீரில் தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com