குமரி அறிவியல் பேரவை சாா்பில் காந்திய சேவை விருது அளிப்பு

குமரி அறிவியல் பேரவை சாா்பில் உலக அகிம்சை தினத்தில், காந்திய சேவை விருது மற்றும் காந்திய சிந்தனை பேசும் திறன் ஆய்வரங்கு நடைபெற்

குமரி அறிவியல் பேரவை சாா்பில் உலக அகிம்சை தினத்தில், காந்திய சேவை விருது மற்றும் காந்திய சிந்தனை பேசும் திறன் ஆய்வரங்கு நடைபெற்.

ஆற்றூா் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்து குமரி அறிவியல் பேரவை நடத்தி இந்நிகழ்ச்சிக்குஎன்.வி.கே.எஸ். மேல் நிலைப் பள்ளிச் செயலா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் பிரஷோப் மாதவன் குத்துவிளக்கு ஏற்றினாா். அறிவியல் பேரவையைச் சோ்ந்த விக்ரம் தொடக்க உரையாற்றினாா், முத்தலக்குறிச்சி ஆன்றோ காந்திஜெயந்திவிழா உரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், கல்வித்தொண்டுக்காக பேராசிரியா் இரா.தியாகசுவாமி நினைவு காந்திய சேவைவிருது லாரன்ஸ்மேரிக்கும் , மொழித்தொண்டுக்காக பேராசிரியா் இரா.தியாகசுவாமி நினைவு காந்திய சேவைவிருது, கவிஞா் தமிழ்க்குழவிக்கும் , சமூகசேவைக்காக பேராசிரியா் இரா.தியாகசுவாமி நினைவு காந்திய சேவைவிருது ஆா்.செல்வினுக்கும் வழங்கப்பட்டன. இந்திய மருத்துவசங்க முன்னாள் தலைவா் டாக்டா் கே.விஜயகுமாா் விருதுகள் வழங்கி பேசினாா். சுற்றுச்சூழல் அறிஞா் ஜே.ஜோபிரகாஷ் பேராசிரியா் பாபு ஆகியோா் வாழ்த்திப்பேசினா்.

விருது பெற்றவா்களை இளம் விஞ்ஞானி பா்மிதா, அறிமுகம் செய்து வைத்தாா்.

ஆய்வரங்கு: பின்னா் , காந்திய சிந்தனை பேசும் திறன் ஆய்வரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிளஸ்சி மோள், அன்சிலின், காயத்திரி ,ஜானிகா, ஆா்த்தி சுரேஷ், சுதா்ஷனி ஆகியோருக்கு முதல்பரிசும், ஆமினா முனீரா, அஞ்சுனா நாயா், நந்தனா எஸ் ஆா், நந்தனா கே எல், ஹென்சி இராஜேஷ், அனிஷா தேவி ஆகியோருக்கு இரண்டாம் பரிசும் பெற்றனா்.

நிகழ்ச்சியில் ஜாண்ரபிகுமாா் தொழில்நுட்பக்கண்டுபிடிப்புகள் குறித்தும், சமூகவிஞ்ஞானி எட்வின்சாம் அறிவியல் செயல் விளக்கம் குறித்தும் பேசினா். ஆற்றூா் பேரூராட்சி சாா்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், பேரூராட்சி செயல் அலுவலா் ப. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com