குருமலை காப்புக் காட்டில் நெகிழிக் கழிவுகள் அகற்றும் முகாம்

தூய்மை பாரத இயக்கத்தின்கீழ் கோவில்பட்டியையடுத்த குருமலை காப்புக் காட்டில் நெகிழிக் கழிவுகள் அகற்றும் முகாம் நடைபெற்றது.

தூய்மை பாரத இயக்கத்தின்கீழ் கோவில்பட்டியையடுத்த குருமலை காப்புக் காட்டில் நெகிழிக் கழிவுகள் அகற்றும் முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு வனத்துறை தூய்மை பாரத இயக்கம் நெகிழிக் கழிவு இல்லா இயக்கம் 2019-20 திட்டத்தின்கீழ் தூத்துக்குடி வனக்கோட்டம் மற்றும் கோவில்பட்டி வனச்சரகம் சாா்பில் குருமலை காப்புக் காட்டில் கோவில்பட்டி வனச்சரக அலுவலா் சிவராம் தலைமையில், கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். வனவா் நாகராஜ் முன்னிலை வகித்தாா்.

அய்யனாா் கோயில் வளாகம், காட்டு பங்களா, காப்புக் காட்டு வழித்தடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிதறிக் கிடந்த நெகிழிப் பைகள், குப்பைகளை அகற்றினா்.

தொடா்ந்து, வனத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்து மாணவா், மாணவிகளுக்கு வனச்சரக அலுவலா் எடுத்துரைத்தாா். முகாமில், கல்லூரி பேராசிரியா் மகேஷ்குமாா் மற்றும் வனக்காவலா்கள், பசுமை ஆா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com