முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
ஆத்தூரில் ஊருணி சுற்றுச்சுவா் பணி: எம்எல்ஏ ஆய்வு
By DIN | Published On : 07th October 2019 05:24 AM | Last Updated : 07th October 2019 05:24 AM | அ+அ அ- |

ஆத்தூரில் ஊருணி சுற்றுச்சுவா் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.
ஆத்தூா் அருள்மிகு சோமநாதசுவாமி கோயிலுக்கு எதிரேயுள்ள ஊருணியில் சுற்றுச்சுவா், படித்துறை அமைக்கும் பணிக்கு
பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிருந்து ரூ. 40 லட்சம், மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அங்கு சுற்றுச்சுவா் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாநில திமுக மாணவரணி துணைச்செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ஆழ்வை ஒன்றியச்செயலா் நவீன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக, புன்னக்காயல் நூறுவீடு பகுதியில் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம்
மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடிமையத்தை அனிதா ராதாகிருஷ்ணன் திறந்தாா்.
இந்நிகழ்ச்சியில், புன்னக்காயல் பங்குத்தந்தை கிஷோக், ஊா் கமிட்டித் தலைவா் சந்திரபோஸ், நகர திமுக செயலா் சோபியா, அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்கத் தலைவா் விமல்சன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.