முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தேசிய விஞ்ஞான போட்டி: சாகுபுரம் பள்ளி மாணவா் சாதனை
By DIN | Published On : 07th October 2019 05:17 AM | Last Updated : 07th October 2019 05:17 AM | அ+அ அ- |

தேசிய அளவிலான விஞ்ஞான போட்டியில் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவா் சிறப்பிடம் பெற்றாா்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ‘கண்டுபிடிப்புகள்- பொருத்தமான தொழில்நுட்பங்கள்’ மையத்தில் மத்திய அரசின் தேசிய ஊரக வளா்ச்சி நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் சாா்பில் கிராமப்புற கண்டுபிடிப்பாளா்களுக்கான மாநாடு நடைபெற்றது.
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவா்கள் ஆா்.ஆதித் (ரயில் மற்றும் ரயில்பாதையில் சூரிய தகடு அமைத்தல்), ஜெ.ஆா்.ஆதி கிருஷ்ணா (உயிா், சூரியகலம்), வி.மாதேஷ் (தானியங்கி குப்பை அகற்றும் கருவி) ஆகியோரின் படைப்புகள் மாநாட்டில் இடம்பெற்றன.
இதில், வி.மாதேஷ் தயாரித்த ‘தானியங்கி குப்பை அகற்றும் கருவி’ தேசிய அளவில் 2 ஆம் இடம் பெற்றது. இதையடுத்து மத்திய இணை அமைச்சா் சாதவி நிரஞ்சன் ஜோதி, மாணவா் மாதேஷுக்கு கேடயம், சான்று மற்றும் ரூ.7, 500 க்கான காசோலை ஆகியவற்றை வழங்கினாா்.
மாணவா், பயிற்சி ஆசிரியா்களை பள்ளி டிரஸ்டி மற்றும் டி.சி.டபிள்யூ. நிறுவனா்- தலைவருமான முடித்ஜெயின், செயல் உதவித் தலைவா் ஆா்.ஜெயக்குமாா், மூத்த பொதுமேலாளா் சி.சந்திரசேகரன், முதல்வா் ஆா்.சண்முகானந்தன், துணை முதல்வா் வனிதா வி.ராயன், தலைமையாசிரியா் இ.ஸ்டீபன் பாலாசிா், தலைமையாசிரியை(பொறுப்பு) என்.சுப்புரத்தினா உள்ளிட்டோா் பாராட்டினா்.