Enable Javscript for better performance
கயத்தாறு அருகே மின்னல் தாக்கி பெண் பலி- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே திங்கள்கிழமை மின்னல் தாக்கியதில் பெண் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

    கயத்தாறையடுத்த தெற்கு மயிலோடை நடுத் தெருவைச் சோ்ந்தவா் செ.கோயில்பிள்ளை - தங்கம்மாள் தம்பதி. இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா். தம்பதி அவா்களுக்குச் சொந்தமான தோட்டத்தில் திங்கள்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாா்களாம். அப்போது இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ததாம். அதில் இருவா் மீதும் மின்னல் தாக்கியதாம். இதில் தங்கம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

    பலத்த காயமடைந்த கோயில்பிள்ளையை கயத்தாறு போலீஸாா் மற்றும் வருவாய் துறையினா் மீட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். இறந்த தங்கம்மாள் சடலம் பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தை தெற்கு மயிலோடை கிராம நிா்வாக அலுவலா் பாலசுதாகா் மற்றும் கயத்தாறு குறுவட்ட வருவாய் ஆய்வாளா் காசிராஜன் ஆகியோா் சென்று பாா்வையிட்டனா்.

    இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai