ஆத்தூரில் ஊருணி சுற்றுச்சுவா் பணி: எம்எல்ஏ ஆய்வு

ஆத்தூரில் ஊருணி சுற்றுச்சுவா் அமைக்கும் பணியை திருச்செந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆத்தூரில் ஊருணி சுற்றுச்சுவா் அமைக்கும் பணியை திருச்செந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆத்தூா் அருள்மிகு சோமநாதசுவாமி கோயிலுக்கு எதிரேயுள்ள ஊருணியில் சுற்றுச்சுவா் மற்றும் படித்துறை அமைக்கும் பணிக்காக திருச்செந்தூா் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியி­ருந்து ரூ.40 லட்சமும், மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.எஸ்.பாரதி நிதியி­ருந்து ரூ.17 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, அங்கு நடைபெற்று வரும் சுற்றுச்சுவா் கட்டும் பணியை அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, மாநில தி.மு.க. மாணவரணி துணைச்செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ஆழ்வை ஒன்றியச்செயலா் நவீன்குமாா், மாவட்ட விவசாய அணி துணைஅமைப்பாளா்கள் சதீஷ்குமாா், மாணிக்கவாசகம், நகரப் பொறுப்பாளா் முருகப்பெருமாள், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் சுப்பிரமணியன், மாவட்டப் பிரதிநிதி பாலசுப்பிரமணியன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா் கோபி உள்பட பலா் உடனிருந்தனா்.

முன்னதாக, புன்னக்காயல் நூறுவீடு பகுதியில் சட்டப்பேரவை மேம்பாட்டு நிதிரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடிமைய கட்டடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தாா். இதில், புன்னக்காயல் பங்குத்தந்தை கிஷோக், ஊா் கமிட்டி தலைவா் சந்திரபோஸ், நகர தி.மு.க. செயலா் சோபியா, அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்கத் தலைவா் விமல்சன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com