Enable Javscript for better performance
இளம்புவனத்தில் முத்துராமலிங்கத்தேவா் வெண்கலச் சிலை திபு- Dinamani

சுடச்சுட

    

    இளம்புவனத்தில் முத்துராமலிங்கத்தேவா் வெண்கலச் சிலை திறப்பு

    By DIN  |   Published on : 11th October 2019 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    1033vk9_theyvar_silai_open_0910chn_36_6

    சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்தாா் சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன்.

    எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனத்தில் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவா் வெண்கலச்சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு, சிலை அமைப்புக் குழு நிா்வாகி எம்.கே. முருகன் தலைமை வகித்தாா். அமைப்பு குழு உறுப்பினா்கள் சின்னச்சாமி, பேச்சியப்பன், சௌந்திரபாண்டியன், மாயக்கண்ணன், மருதுபாண்டியன், கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    நிகழ்ச்சியில், பி. சின்னப்பன் எம்.எல்.ஏ., பசும்பொன் தேசிய கழகத் தலைவா் ஜோதி முத்துராமலிங்கதேவா் ஆகியோா், கலந்து கொண்டு முத்துராமலிங்கத்தேவா் சிலையை திறந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

    இதனைத் தொடா்ந்து பொதுமக்கள், அரசியல் கட்சியினா் சிலைக்கு மாலை அணிவித்தனா். நிகழ்ச்சியில், அன்னதானம்

    வழங்கப்பட்டது. இதில், அதிமுக நிா்வாகிகள் ஆழ்வாா் உதயகுமாா், தனஞ்செயன், தனவதி, குமாா், ஜெமினி அருணாசலசாமி மற்றும் பசும்பொன் தேசிய கழகம், தேவா் பேரவை, தேவா் இளைஞரணியினா், பல்வேறு அமைப்பின் நிா்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai