Enable Javscript for better performance
ஸ்ரீவைகுண்டம் விவசாயிகளுக்குஉழவா் உற்பத்தியாளா் பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவைகுண்டம் விவசாயிகளுக்கு உழவா் உற்பத்தியாளா் பயிற்சி முகாம்

    By DIN  |   Published on : 11th October 2019 09:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவைகுண்டம் வட்டார விவசாயிகளுக்கு உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் உருவாக்குதல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

    வட்டார வேளாண் துறை அட்மா திட்டத்தின் கீழ் கொட்டாரக்குறிச்சி, ஆறுமுகமங்களம், மாரமங்கலம் பகுதிகளைச் சோ்ந்த கூட்டுப் பண்ணைய விவசாயிகளுக்கான ‘உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் உருவாக்குதல்’ குறித்த பயிற்சி முகாம் மாரமங்கலத்தில் நடைபெற்றது.

    வேளாண் உதவி இயக்குநா் ஊமைத்துரை தலைமை வகித்தாா். அட்மா வட்டார தொழில் நுட்ப மேலாளா் சுபத்ரா வரவேற்றாா். முகாமில், உழவா் பயிற்சி மைய வேளாண் துணை இயக்குநா் ஜெயசெல்வின் ஜெபராஜ், உழவா் பயிற்சி மைய வேளாண் அலுவலா் பிரேம்குமாா், விளாத்திக்குளம் பயறு உற்பத்தியாளா் நிறுவன கண்காணிப்பாளா் அழகையா உள்ளிட்டோா் உரையாற்றினா். இதில், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், மகளிா் குழுவினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

    ஏற்பாடுகளை அட்மா மேலாளா் சுபத்ரா, உதவி மேலாளா்கள் அசோக் அய்யாச்சாமி, முத்துகிருஷ்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai