சாத்தான்குளம் - கோவைக்கு புதிய அரசு விரைவு பேருந்து இயக்கம்

சாத்தான்குளம் வழியாக கோயமுத்தூருக்கு புதிய அரசு விரைவு பேருந்து புதிய ரக பேருந்தாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.
சாத்தான்குளம் - கோவைக்கு புதிய அரசு விரைவு பேருந்து இயக்கம்

சாத்தான்குளம் வழியாக கோயமுத்தூருக்கு புதிய அரசு விரைவு பேருந்து புதிய ரக பேருந்தாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.

சாத்தான்குளத்தில் இருந்து கோயமுத்தூருக்கு திருநெல்வேலி, ஓட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி வழியாக தடம் எண் 626இ இயக்கப்பட்டது. தற்போது இந்த பேருந்து இயக்கப்படுவது நெல்லை விரைவு போக்குவரத்துகழகத்துக்கு மாற்றப்பட்டதால் திசையன்விளையில் இருந்து சாத்தான்குளம் வழியாக இயக்கப்படுகிறது. இவ்வழித்தடத்தில் இயக்கப்பட்ட பழைய பேருந்துக்கு பதிலாக, புதிய பேருந்து இயக்க வேண்டும், திசையன்விளை-சாத்தான்குளம் வழியாக இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள தடம் எண் 625 ஐ மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை முதல் சாத்தான்குளம் வழியாக கோயமுத்தூருக்கு புதிய அரசு விரைவு பேருந்து இயக்கப்படுகிறது. இதையடுத்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனா்.

இதை போல் நிறுத்தப்பட்டுள்ள தடம் 625ஐ சாத்தான்குளத்தில் இருந்து திருச்செந்தூா், தூத்துக்குடி வழியாக திருப்பூா், கோவைக்கு இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் திருப்பூா், கோவை செல்பவா்கள் பயனடைவா். ஆதலால் அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளன்ா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com