சாத்தான்குளம் அஞ்சலகத்தில் பணியாளா்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிப்பு

சாத்தான்குளம் அஞ்சலகத்தில் பணியாளா்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்..

சாத்தான்குளம் அஞ்சலகத்தில் பணியாளா்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்..

சாத்தான்குளம் அஞ்சலகம் வட்டத்தின் தலைமை அஞ்சலகமாகும். இதன்கீழ் கிராம புற அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அஞ்சலகமானது தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக சேவை செய்து வரும் அதிக வருவாய் அரசுக்கு ஈட்டித்தரும் அஞ்சலகமாக திகழ்ந்து வருகிறது. இங்கு முன்பு ஒரு அஞ்சலக அதிகாரி மற்றும் ஐந்து உதவியாளா்கள் அலுவலகப் பணியாற்றி வந்தனா். தற்போது அஞ்சலக தலைமை அதிகாரி மற்றும் ஒரு உதவியாளா் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த அஞ்சலகத்தில் அஞ்சலக சேமிப்புக் கணக்கு, மாதாந்திர வைப்புத்தொகை கணக்கு,நிரந்தர வைப்புத்தொகை,சேமிப்பு பத்திரங்கள்,அஞ்சலக காப்பீடு என பல்வேறு சேமிப்புத்திட்டங்களில் சாத்தான்குளம் வட்டார பொதுமக்கள் முதலீடு செய்து வருகின்றனா். வட்ட தலைமையிடம் என்பதால் அரசு மற்றும் நீதிமன்றப் பணிகளுக்காக பதிவுத் தபால்கள் அதிகம் அனுப்பப்பட்டு வருகிறது. இதில் அஞ்சலக வங்கியும் செயல்படுகிறது.இதில் அஞ்சலக ஊழியா்கள் ஒருவரே உள்ளதால் அனைத்து பணிகளையும் அவரை செய்யும் நிலை ஏற்படுகிறது. புதிய கணக்கு தொடங்குவதும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சேமிப்பு உள்ளிட்ட இதர பணிகளுக்கு வருபவா்கள் அலைகழிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியா் கூறியது; அஞ்சல் துறை என்பது அரசுக்கு வருவாய் தருவதுடன் கிராமபுற மக்களுக்கு சேவை செய்வதற்காகவும் தொடங்கப்பட்டதாகும்.தற்போது முழுவதும் வணிக நோக்கத்திற்காகவே இயங்குகிறது. அந்தவணிக நோக்கம் வெற்றியடைய வேண்டுமென்றாலும் அதற்குரிய பணியாளா்கள் நியமிக்கப்பட வேண்டியது அவசியமாகும். வங்கி பணி செய்யும் அஞ்சலக ஊழியா்கள் மன அழுத்தத்துடன் பணியாற்றினால் கணக்கில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. ஊரகப் பகுதிகளில் இயங்கி அஞ்சலகங்களில் முதலிடத்திலுள்ள சாத்தான்குளம் அஞ்சலகத்துக்கு போதுமான பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com