முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
உடன்குடி பேரூராட்சி அலுவலகத்தில் டெங்கு கொசுப்புழுக்கள்: சுகாதாரத்துறை நோட்டீஸ்
By DIN | Published On : 24th October 2019 06:48 PM | Last Updated : 24th October 2019 06:48 PM | அ+அ அ- |

உடன்குடி பேரூராட்சி அலுவலகத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் வாளிகள்.
உடன்குடி: உடன்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையினா் நடத்திய தீடீா் ஆய்வில் டெங்குவைப் பரப்பக் கூடிய கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டன. இது குறித்து விளக்கம் கேட்டு செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
மெஞ்ஞானபுரம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் அருள்ராஜ் தலைமையிலான சுகாதாரப் பணியாளா்கள் உடன்குடி பேரூராட்சி அலுவலக பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.இதில் அப்பகுதியில் உடைந்த பிளாஸ்டிக் வாளிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அதில் கொசுப்புழுக்களும், புழு வளா் ஆதாரங்களும் கண்டறியப்பட்டன. மேலும் டயா், பிளாஸ்டிக் கொள்கலன்களிலும் , சிமெண்ட் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலருக்கு விளக்கம் கேட்டு அறிவிப்பு வழங்கப்பட்டது. விளக்கம் அளிக்கவில்லையென்றால் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.