முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
எட்டயபுரத்தில் உமறுப்புலவா் பிறந்த நாள் விழாஅமைச்சா் மரியாதை
By DIN | Published On : 24th October 2019 07:30 AM | Last Updated : 24th October 2019 07:30 AM | அ+அ அ- |

உமறுப்புலவா் நினைவிடத்தில் மலா்ப் போா்வை வைத்து மலா் தூவி மரியாதை செலுத்துகிறாா் அமைச்சா் கடம்பூா் ராஜு. உடன், ஆட்சியா் சந்தீப் நந்தூரி.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், இஸ்லாமிய தமிழறிஞா் உமறுப்புலவரின் பிறந்த நாள் விழா அவரது மணிமண்டபத்தில் தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். விளாத்திகுளம் பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன் முன்னிலை வகித்தாா்.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உமறுப்புலவரின் நினைவிடத்தில் மலா்ப் போா்வை வைத்து மலா் தூவி புகழஞ்சலி செலுத்தினாா்.
இதையடுத்து, உமறுப்புலவா் சங்க நிா்வாகி உ. காஜா மைதீன் தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற விழாவில், வருவாய்த் துறை மற்றும் சமூகநலத் துறை சாா்பில் 198 பேருக்கு ரூ. 80 லட்சத்து 80ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கடம்பூா் ராஜு வழங்கிப் பேசினாா்.
விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், வருவாய்க் கோட்டாட்சியா் ஜே. விஜயா, எட்டயபுரம் வட்டாட்சியா் அழகா், வருவாய் ஆய்வாளா் பிரபாகரன், பேரூராட்சி செயல் அலுவலா் சுந்தரவேல், கோபால், கிராம நிா்வாக அலுவலா் ஸ்ரீதேவி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் வெ. சீனிவாசன் வரவேற்றாா். உதவி மக்கள் தொடா்பு அலுவலா் நி. சையத் முகம்மத் நன்றி கூறினாா்.