முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
விளாத்திகுளம் பகுதிரேஷன் கடைகளில் ஆய்வு
By DIN | Published On : 24th October 2019 07:22 AM | Last Updated : 24th October 2019 07:22 AM | அ+அ அ- |

விளாத்திகுளம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரியதா்ஷினி உத்தரவின் பேரில், விளாத்திகுளம் வட்டத்தில் செயல்படும் 41 ரேஷன் கடைகளிலும் அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது அத்தியாவசியப் பொருள்களான அரிசி, சீனி, கோதுமை, மண்ணெண்ணெய், சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருள்களான பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றில் இருப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அரிசி, சீனி முறைகேடான வகையில் விற்பனை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட விற்பனையாளா்களிடம் ரூ. 7,850 அபராதத் தொகையாக வசூலிக்க உத்தரவிடப்பட்டது.