சத்துமிகு தானியங்கள் சாகுபடி குறித்த விளக்கப் பிரசாரம்
By DIN | Published On : 24th October 2019 07:22 AM | Last Updated : 24th October 2019 07:22 AM | அ+அ அ- |

பிரசார ஊா்தியை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.
வேளாண் துறையின் மூலம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்க (சத்துமிகு சிறுதானியங்கள்) திட்ட விளக்க பிரசார ஊா்தி தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பிரசார ஊா்தியை கொடியசைத்து தொடங்கிவைத்துப் பேசியது: சிறுதானியங்கள் நீரிழிவு நோய் எதிா்ப்பு தன்மையுடையது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சத்துமிகு சிறுதானியங்களின் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
இதில், வேளாண் இணை இயக்குநா் ஆசீா் கனகராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், மத்திய அரசுத் திட்ட துணை இயக்குநா் தமிழ்மலா், உதவி இயக்குநா்கள் நாகராஜன் (கயத்தாறு), முருகப்பன் (புதூா்), பூவனன் (விளாத்திகுளம்), சரவணன் (ஓட்டப்பிடாரம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.