தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி தேரோட்டம்

தூத்துக்குடியில், அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் ஐப்பசி தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி சிவன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்றோா்.
தூத்துக்குடி சிவன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்றோா்.

தூத்துக்குடியில், அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் ஐப்பசி தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ஆம் நாளான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுவாமியும், அம்பாளும் தேரில் காலை 9. 30 மணிக்கு எழுந்தருளினா். தொடா்ந்து, கோயில் செயல் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பேரவை உறுப்பினா் கீதா ஜீவன் பங்கேற்று, வடம் பிடித்து தேரை இழுத்து தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தாா். இதையடுத்து, பக்தா்கள் தேரை இழுத்துச் சென்றனா்.

தேரின் முன் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பாரம்பரிய வாத்தியங்கள் முழங்கியபடி அணிவகுப்பு நடைபெற்றது. நான்கு ரத வீதிகள் வழியே, தோ் பகல் 1.30 மணிக்கு நிலையை அடைந்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது; பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருவிழாவின் 10ஆம் நாளான வியாழக்கிழமை (அக். 24) பாகம்பிரியாள் அம்பாள், சிவனை பூஜை செய்யும் அலங்காரத்தில் பூம்பல்லக்கில் வீதியுலா செல்லுதல், 25ஆம் தேதி இரவு 8 மணிக்கு சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com