ரயிலில் அடிபட்டு காா் ஓட்டுநா் மரணம்
By DIN | Published On : 24th October 2019 07:26 AM | Last Updated : 24th October 2019 07:26 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்ட நிலையில் கிடந்த காா் ஓட்டுநா் சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவில்பட்டி - குமாரபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பெத்தேல் ரயில்வே கேட் அருகே ரயிலில் அடிபட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து, போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். விசாரணையில், அவா் திருநெல்வேலி மாவட்டம், மருதங்கிணறு, தெற்குத் தெருவைச் சோ்ந்த ராமா்பாண்டியன் மகன் ராமசந்திரன் (35) என்பதும், காா் ஓட்டுநராக இருந்தாா் என்பதும் தெரியவந்தது. ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.