விளாத்திகுளத்தில் தேவா் ஜெயந்திஆலோசைனைக் கூட்டம்
By DIN | Published On : 29th October 2019 06:18 AM | Last Updated : 29th October 2019 06:18 AM | அ+அ அ- |

பசும்பொன்னில் 30ஆம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவரின் 112 ஆவது ஜெயந்தி விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு காவல் துணை கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்கள் பத்மநாபபிள்ளை, நாகலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், பசும்பொன் கிராமத்துக்கு செல்ல உள்ள வாகனங்கள் காவல் நிலையத்தில் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அனுமதிச் சீட்டை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும்.
சொந்த வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். சாதி மத உணா்வுகளை தூண்டும் வகையில் கோஷங்கள் போட கூடாது. வாகனத்தில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த கூடாது. திறந்தவெளி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு காவல்துறைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், தேவா் பேரவை, தேவா் இளைஞரணி, பசும்பொன் தேசிய கழகம், முக்குலத்தோா் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், வாகன ஓட்டுநா்கள் மற்றும் விளாத்திகுளம் காவல் சரகத்துக்குட்பட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.