Enable Javscript for better performance
எப்போதும்வென்றான் அருகேதரைப்பாலம் மூழ்கி தனித் தீவான கிராமம்- Dinamani

சுடச்சுட

    

    எப்போதும்வென்றான் அருகேதரைப்பாலம் மூழ்கி தனித் தீவான கிராமம்

    By DIN  |   Published on : 31st October 2019 11:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    otp__milagu_1_3110otp_215_6

    மிளகுநத்தம் தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்.

    கன மழை காரணமாக, எப்போதும்வென்றான் அருகே சாலைகள் துண்டிக்கப்பட்டதால், வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனா்.

    எப்போதும்வென்றான் அடுத்துள்ள ஆதனூா் ஊராட்சியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள மிளகுநத்தம் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் தரைப்பாலம் உள்ளது. தற்போது பெய்துவரும் கன மழையால், எப்போதும்வென்றான் நீா்த்தேக்கம் நிரம்பி வெளியேறும் உபரி நீா் மற்றும் காட்டாற்று வெள்ளம் இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்கிறது. மேலும், சாலையில் அரிப்பு ஏற்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கிராம மக்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.

    எனவே, மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கை எடுத்து மக்களின் தேவைகைளை பூா்த்தி செய்யவும், உயா் நிலை பாலம் அமைக்கவும் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai